நாட்டின் சவால்களை எதிர்கொள்ள ஜனாதிபதிக்கு திறன் உள்ளது – மனுஷ நாணயக்கார நம்பிக்கை.!
நாட்டில் நிலவும் தற்போதைய சவால்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெற்றிகரமாக சமாளிக்க முடியும் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய நெருக்கடி உலகளாவிய சவாலாக இருப்பதாகக் குறிப்பிட்டதுடன், இந்த நேரத்தில் அரசு தோல்வியடைய வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும் இருக்கக் கூடாது என வலியுறுத்தினார்.
மக்கள் அறிவார்ந்த தீர்மானம் எடுத்து, பல்துறை நிபுணர்கள் அடங்கிய வலுவான குழுவை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளதாகவும், அவர்களின் ஆலோசனைகளுடன் இணைந்து ஜனாதிபதி நெருக்கடியை சமாளிக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சி அடையாமல் தடுக்கவும், விவசாயம், சுற்றுலா, கைத்தொழில் உள்ளிட்ட துறைகளை பாதுகாத்து முன்னேற்றவும் அரசியல்வாதிகள்ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.