உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு சைபர் பாதுகாப்பு பயிற்சி – டிஜிட்டல் திறன் மேம்பாட்டுக்கு முக்கிய முன்னேற்றம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

அரசாங்கத் துறையில் சைபர் பாதுகாப்பு குறித்த அறிவை மேம்படுத்தும் நோக்கில், நாடாளுமன்ற ஊழியர்களுக்கான விசேட பயிற்சித் திட்டம் ஒன்றை இலங்கை கணனி அவசர தயார் நிலை பிரிவு அண்மையில் நடத்தியுள்ளது.


ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வழங்கிய அறிவுறுத்தலுக்கு இணங்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சும் இலங்கை கணனி அவசர தயார் நிலை பிரிவும் இணைந்து இந்தப் பயிற்சியை ஒருங்கிணைத்தன. நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.


இப்பயிற்சியில், சமூக ஊடகங்களை பொறுப்புடனும் சட்டபூர்வமாகவும் பயன்படுத்துதல், சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளுதல், தகவல் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் இரகசியத் தகவல்களை பாதுகாப்பது போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்த முயற்சி, அரச நிறுவனங்களில் டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்தும் தேசிய அளவிலான திட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதுடன், சைபர் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

74 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

61 0 0