உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நோன்புப் பெருநாள் வாழ்த்து: ஒற்றுமையுடன் வாழ வேண்டும் – உதுமாங்கண்டு நாபீர்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகரும் பொறியியலாளருமான உதுமாங்கண்டு நாபீர், முஸ்லிம் சமூகத்தினருக்கு தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டு, இந்நாள் சுபிட்சம் மிக்க நாளாக மலர வேண்டுமென வாழ்த்தினார்.


அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க ஒரு மாத கால நோன்பை நிறைவு செய்த முஸ்லிம்கள் உலகம் முழுவதும் ஈதுல் பித்ர் திருநாளை கொண்டாடும் இவ்வேளையில், சமுதாய ஒற்றுமை மிகவும் அவசியமானதாக இருப்பதாக வலியுறுத்தியுள்ளார்.

முஸ்லிம் சமூகத்தினருக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் சதித் திட்டங்கள் உலகளவில் இடம்பெற்று வரும் சூழலில், ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் செயல்பட வேண்டியது முக்கியம் என அவர் குறிப்பிட்டார்.


மேலும், மதச் சுதந்திரத்துடன் வாழ்வதற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் இந்நாளில் இறைவனிடம் பிரார்த்திப்பதாக தெரிவித்த அவர், கோபம், பொறாமை போன்ற தீய எண்ணங்களை விலக்கிமனிதநேயத்துடன் சமூகத்தில் நல்லிணக்கமாக வாழ வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.


இலங்கை முஸ்லிம்கள் புதிய நம்பிக்கையுடன் ரமழான் திருநாளைக் கொண்டாடுவது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் அமைதியுடனும் வாழ இறைவனை நாடுவோம் என்றும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

74 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

61 0 0