ஆசனப்பட்டி தொடர்பான சட்ட அமுலாக்கம் ஒத்திவைப்பு.!
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து சாரதிகளும் பயணிகளும் ஆசனப்பட்டிகளை அணிய வேண்டும் எனும் சட்டமானது, இன்று (20) அமுலுக்கு வரவிருந்த நிலையில் சட்ட அமுலாக்கம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளார்.