தடையற்ற மின்சாரம் வழங்குவதே அரசின் பிரதான இலக்கு – அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ.!
அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் தடையற்ற மின்சாரத்தை வழங்குவதாகும் என்றும், அதற்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (20) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், உலகச் சந்தையில் நிலக்கரி உள்ளிட்ட பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
சாதாரண காலங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது கொள்வனவுகளுக்கான விலைகள் அதிகரித்துள்ளதால், எதிர்கால தீர்மானங்கள் அனைத்தும் உலகச் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், மின்சார நுகர்வு மாதந்தோறும் மாறுபடுவதால் சில காலங்களில் அதிகப்படியான தேவை உருவாகின்றது என்றும், நிலக்கரியின் தரம் தொடர்பான அறிக்கைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்கள் தொடர்பான தீர்மானங்கள் உலகச் சந்தை மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.