உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்தர பொங்கல் விழா தொடர்பான மீளாய்வு கூட்டம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
21 பார்வைகள்

கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் விழா வழமை போன்று இந்த ஆண்டிலும் வெகு சிறப்பாக நடைபெற அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமென மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், கிளிநொச்சி மாவட்டத்திலே வரலாற்று தொன்மை கொண்ட ஆலயமாக இந்த ஆலயம் காணப்படுகிறது.

இதற்கான தனி சிறப்பும் காணப்படுகின்றது இந்த ஆலயத்திற்கு இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்ற இவ்வாலயத்தின் தேவைப்பாடுகள் குறிப்பாக சுகாதார வசதி மற்றும் பாதுகாப்பு போன்ற விடயங்கள் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் விழா எதிர்வரும் 25ஆம் திகதி விளக்கு வைத்தலுடன் ஆரம்பமாகி ஏப்ரல் 01ஆம் திகதி பொங்கல் விழா நடைபெறவுள்ளது.

பொங்கல் விழா தொடர்பான மீளாய்வு கூட்டம் இன்று (20) பகல் 10.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

நாகதம்பிரான் ஆலய முன்றலில் முற்பகல் 10 மணிக்கு ஆலய பூசை வழிபாடுகளை தொடர்ந்து ஆலய முன்றலில் மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பிரதிப் பணிப்பாளர் துறைசார்ந்த திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் ஆலய தொண்டர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

69 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

72 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

59 0 0