உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவினர் இலங்கைக்கு வருகை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று எதிர்வரும் 26ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது என்று அந்த அமைப்பின் தொடர்பாடல் திணைக்களப் பணிப்பாளர் ஜூலி கோசாக் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

கொள்கை ரீதியான முக்கிய கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக இலங்கை வரவுள்ள இந்தக் குழுவினர், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பேச்சுகளை முன்னெடுப்பர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் 5 ஆவது மற்றும் 6 ஆவது மீளாய்வுகளை ஒன்றிணைத்து நிறைவு செய்வதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, வரி மறுசீரமைப்பு மற்றும் கடன் மறுசீரமைப்பு செயன்முறைகளில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தக் குழுவினர் அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் விரிவாக ஆராயவுள்ளனர்.

இந்த மீளாய்வுகள் வெற்றிகரமாக நிறைவடையும் பட்சத்தில், இலங்கைக்கு கிடைக்க வேண்டிய அடுத்தகட்ட நிதி உதவிகள் தடையின்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

69 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

72 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

59 0 0