உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மத்தள விமான நிலையத்தில் அமெரிக்க போர் விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தில் தமது போர் விமானங்களைத் தரையிறக்குவதற்கு அமெரிக்கா அனுமதி கோரி இருந்தாலும் அதற்கு இடமளிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அதற்குரிய நியாயபூர்வமான காரணங்களையும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் இன்று எடுத்துரைத்தார்.

ஈரான் கப்பல் விவகாரம் தொடர்பில் எதிரணியால் பொறுப்பற்ற விதத்தில் முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளையும் ஜனாதிபதி நிராகரித்தார்.

ஜனாதிபதி தமதுரையில் கூறிய முக்கிய சில விடயங்கள் வருமாறு:-

நடுநிலைக் கொள்கை
“மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல் தொடர்பில் இலங்கை மத்தியஸ்த கொள்கையையே பின்பற்றி வருகின்றது. இந்தக் கொள்கையில் இருந்து நாம் விலகப்போவதில்லை. எனினும், நாம் ஒரு தரப்புக்குச் சார்பாக செயற்படுகின்றோம் எனவும், முடிவுகள் முறையாக எடுக்கப்படுவதில்லை எனவும் சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். இது அடிப்படையற்ற குற்றச்சாட்டாகும்.

ஈரான் கப்பல்
2026 மார்ச் 9 மற்றும் 13 ஆம் திகதிகளில் இலங்கைக்கு நல்லெண்ண அடிப்படையிலான விஜயத்தை மேற்கொள்வதற்கு ஈரானின் கப்பல்களுக்கு அனுமதி வழங்குமாறு 2026 பெப்ரவரி 26 ஆம் திகதி அனுமதி கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் அரசு பரிசீலித்து வந்தது.

அன்று மாலையே தமது கடற்படைக்குரிய இரண்டு போர் விமானங்களை மத்தள விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு அமெரிக்கா அனுமதி கோரியது.

இவ்வாறு இரு தரப்புகளும் எம்மிடம் கோரிக்கை விடுத்திருந்தன. அக்காலப்பகுதியில் போர்ச்சூழல் ஏற்படும் அபாயமும் இருந்தது. நாம் மத்தியஸ்தக் கொள்கையை பின்பற்றுவதால் அனுமதி வழங்கவில்லை.

சிறந்த முடிவு
ஈரான் கப்பலுக்கு ஏன் அனுமதி வழங்கவில்லை எனச் சிலர் கேட்கின்றனர். அவ்வாறு வழங்கி இருந்தால் அமெரிக்கப் போர் விமானங்களுக்கும் அனுமதி வழங்கி இருக்க வேண்டும்.

அவ்வாறு செய்திருந்தால் இலங்கைக்குத் தொலைவில் நடக்கும் போர் மத்தள துறைமுகம் மற்றும் கொழும்புத் துறைமுகம் வரை நெருங்கி இருக்கக்கூடும். நாம் அதற்கு இடமளிக்கவில்லை. நெருக்கடியான சூழ்நிலையிலும் நாம் மத்தியஸ்த கொள்கையைப் பாதுகாத்தோம்.

ஈரான் கப்பலில் இருந்த மாலுமி ஒருவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்குச் சிகிச்சையளிப்பதற்கு உதவி கோரப்பட்டிருந்தது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் உதவ வேண்டும் என்பது சர்வதேச சட்டத்திலுள்ள ஏற்பாடு. அதற்கமைய இடமளிக்கப்பட்டது.

இலங்கையின் பொருளாதார மண்டலத்துக்கு அப்பால் உள்ள பகுதியில் ஈரான் கப்பலொன்று தாக்குதலுக்கு இலக்கானது. அப்போதும் சர்வதேச சட்டம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் நாம் உதவினோம்.

பாதுகாப்பு ஒப்பந்தம்
அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றியும் பல கோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. போரில் ஈடுபடுவது தொடர்பில் எதுவும் இல்லை. இராணுவப் பயிற்சி, ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்களே எம்மிடையில் உள்ளன. எதிரணி கூறுவது போல் ஒப்பந்தம் இருந்தால் அமெரிக்க விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்கி இருக்க வேண்டும் அல்லவா? எனவே, சர்வதேச விவகாரங்களின்போது பொறுப்புடன் எதிரணி கருத்துகளை முன்வைக்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

69 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

72 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

59 0 0