தங்கத்தின் விலையில் வீழ்ச்சி.!
நாட்டில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (20) 6,000 ரூபாய் குறைந்துள்ளது.
அந்தவகையில், தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 388,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 357,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றதாக அகில இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,500 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,625 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.