உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்குள் நுழைந்த காட்டு யானை; உயிர் தப்பிய காவலாளி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் இன்று (20.03.2026) அதிகாலை காட்டு யானை ஒன்று வைத்தியசாலைக்கு உட்புக வந்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை வேளையில் வைத்தியசாலைக்குள் நுழைந்த காட்டு யானையைத் தடுத்து நிறுத்த முயன்ற பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த காவலாளி ஒருவரை யானை தாக்க முற்பட்டுள்ளது.

இதன்போது அவர் மிகச் சாமர்த்தியமாகச் செயல்பட்டு மயிரிழையில் உயிர் தப்பிய போதிலும், அவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் திடீர் ஊடுருவல் காரணமாக இன்று அதிகாலை வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளிகள், வைத்தியர்கள் மற்றும் ஏனைய உத்தியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் அச்சமும் பதற்றமும் நிலவியது.

வைத்தியசாலை வளாகத்திலிருந்து வெளியேறிய காட்டு யானை பிரதான வீதி ஊடாகச் சென்று தேற்றாத்தீவு பகுதிக்குள் நுழைந்துள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த யானையினை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபை ஊழியர்கள், வனஜீவராசி திணைக்கள ஊழியர்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காட்டுப் பகுதிகளில் இருந்து யானைகள் மீண்டும் நகரங்களை நோக்கி வரத் தொடங்கியுள்ளமை இப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

69 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

72 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

59 0 0