உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பாரிய அளவிலான QR குறியீடு மோசடிகள்; குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையில் இடம்பெற்றுள்ள பாரிய அளவிலான QR குறியீடு மோசடிகள் தொடர்பாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க கடந்த மார்ச் 15 முதல் QR குறியீடு முறை மீண்டும் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில், முறைமையில் மேற்கொள்ளப்பட்ட அண்மைக்கால இற்றைப்படுத்தல்களைப் (System Update) பயன்படுத்தி, ஒரு சில நபர்கள் மற்றவர்களின் வாகனங்களுக்கு முறையற்ற வகையில் QR குறியீடுகளை உருவாக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

புதிய முறையில் மாற்றங்கள் செய்யப்பட்ட ஒரே நாளில் சுமார் 600,000 புதிய QR குறியீடுகள் மோசடியான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்த மோசடிகளுடன் தொடர்புடையவர்களின் IP முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களைக் கொண்டு அவர்களைக் கைது செய்ய காவல்துறை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இவ்வாறான தொழில்நுட்ப முறைகேடுகளுக்கு மத்தியிலும், நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் எவ்விதத் தடையுமின்றி முன்னெடுக்கப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

69 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

72 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

59 0 0