உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக இலங்கையில் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில்,

தற்போது ஏற்பட்டுள்ள போர் பதற்ற நிலவரத்தால் தற்போது சீனி மற்றும் பருப்பு ஆகியவற்றின் மொத்த விலை 1 கிலோகிராமுக்கு 2 முதல் 3 ரூபா வரை அதிகரித்துள்ளது.

போர்ச் சூழல் காரணமாக கப்பல் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளன. இதனால் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு வருவதற்கு மேலதிக செலவுகளை சுமக்க வேண்டியுள்ளது.

எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் மொத்த விலையில் கிலோவுக்கு சுமார் 10 ரூபா குறைந்துள்ளது.

தற்போதைய சந்தையில் பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லை என்றாலும் பொருட்களின் விலை ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகிறது.

இதனை கருத்திற்கொண்டு வியாபாரிகள் பொருட்களை பதுக்கி வைக்க முயற்சிக்கக் கூடாது. இந்த சூழலையும் சமாளிக்க முடியும்.

அத்துடன் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நெத்தலி கருவாடு தற்போது நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதில்லை. இலங்கைக்கு தேவையான நெத்தலி கருவாட்டில் சுமார் 60 சதவீதம் ஈரானிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.

அந்த சந்தை தற்போது பாதிக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் காலங்களில் அவற்றை தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்ய முடியும்.

மேலும், தற்போது ரின் மீன் இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு ரின் மீன் உற்பத்தியில், போதுமான அளவு கையிருப்பில் இல்லாததால், மீண்டும் ரின் மீன் இறக்குமதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்படாவிட்டால், பண்டிகைக் காலத்தில் பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யலாம் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

68 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

71 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

59 0 0