உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மத்திய கிழக்குப் போரில் இலங்கை அரசு தெளிவற்ற நிலை – ஹக்கீம் குற்றச்சாட்டு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

மத்திய கிழக்கில் நிகழும் போர்சூழலில் இலங்கை அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கத் தயங்கி வருகிறது என்றும், புறநிலை பாதிப்புகளை தவிர்க்க “பூசி மெழுகு போக்கு” கடைபிடிக்கிறது என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


நாடாளுமன்ற ஒத்திவைப்பு வேளையில் உரையாற்றிய அவர், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தும் தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களை மீறிய செயல் எனக் குறிப்பிட்டு, “ஈரான் மீது எந்த நியாயமான காரணமும் இல்லாமல் தாக்குதல் நடக்கிறது. அவர்கள் ஆட்சிமுறையை ஏற்கவில்லை என்பதால் ஆன்மீக தலைவரைப் படுகொலை செய்துவிட்டு தாக்குகின்றனர்.

உலக நாடுகள் பல ஈரானுக்கே ஆதரவாக இருக்கின்றன. ஆனால் எமது அரசு அமெரிக்காவை திருப்திப்படுத்துவதற்காக தெளிவான முடிவை எடுக்கத் தயங்குகிறது” என்றார்.ஹக்கீம் மேலும், சர்வதேச கடல்எல்லையில் பாதிக்கப்பட்ட ஈரான் கப்பலுக்கு இலங்கை அரசாங்கம் 11 மணிநேரம் அனுமதி தாமதித்தது தவறான முன்னுதாரணமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.


அவர் அரசாங்கம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் பெரும்பாலான வெளிநாட்டுத் தூதுவர்கள் கலந்துகொள்ளாதது ஈரானுக்கு எதிரான போரில் அரசாங்கத்தின் தெளிவற்ற வெளியுறவு கொள்கையின் காரணம் என்றும் குற்றச்சாட்டிட்டார்.ஹோர்முஸ் நீரிணை மூடப்படும்போது இலங்கைக்கு பாதிப்பு வராது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறியதை ஹக்கீம் நிராகரித்து, இந்தியாவிடமிருந்து எரிபொருள் பெற்றாலும் அது ஹோர்முஸ் வழியாகவே வரவேண்டும் என்பதைக் அமைச்சர் புரிந்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.


அவர் மேலும் எச்சரித்து கூறியதாவது, ஹூதி படைகள் செங்கடலில் தாக்குதல்களை தீவிரப்படுத்தினால், இலங்கையின் பொருளாதாரபாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும்.தலைப்புச் செய்தியில் ஹக்கீம் குறிப்பிட்டார்: “எதிர்க்கட்சியில் இருந்தபோது காட்டிய நடுநிலைமையை அநுர அரசாங்கம் தற்போது கடைபிடிக்கவில்லை. பலஸ்தீன மக்கள் கொல்லப்படும்போதும், தற்போது ஈரான் தாக்கப்படும்போதும் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தத் தயங்குவது கவலையளிக்கிறது.”

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

68 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

71 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

59 0 0