உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சட்டவிரோத கடற்றொழிலால் வடக்கு மீனவர்கள் பாதிப்பு – மீனவ அமைப்பு குற்றச்சாட்டு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

உள்ளூர் இழுவைமடி படகுகள் மற்றும் எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களின் ரோலர்களால் வடக்கு மீனவர்கள் தொடர்ந்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக வடமாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதி நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது, மன்னார் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கடற்றொழில்கள் கட்டுப்பாட்டில் இருந்தாலும், யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை.

குறிப்பாக இழுவைமடி படகுகள், சுருக்குவலை தொழில், டைனமெட் மீன்பிடி போன்றவை மீன் வளங்களை அழித்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.மேலும், வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் பிற மாவட்ட மீனவர்கள் சட்டவிரோதமாக வாடி அமைத்து கடல் வளங்களைப் பயன்படுத்துவதாகவும், இதனால் உள்ளூர் மீனவர்கள் வாழ்வாதார இழப்பைச் சந்தித்து வருவதாகவும் கூறினார்.


இதனுடன், மண்ணெண்ணெய் பற்றாக்குறை காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளிலும், பிடிக்கப்பட்ட மீன்களை குளிரூட்டிப் பாதுகாத்து சந்தைக்கு கொண்டு செல்வதிலும் கடும் சிரமங்கள் நிலவுகின்றன. இதனால் மீனவர்கள் பொருளாதார ரீதியாக பெரும் இழப்புகளை சந்தித்து வருவதாகவும், அவர்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்க அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

68 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

71 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

59 0 0