உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள்!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

பெரும்போக அறுவடை மற்றும் சிறு போகச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தடையின்றி எரிபொருளைப் பெற்றுக்கொடுக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் சுமித் சந்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

விவசாய சேவை நிலையங்கள் ஊடாகத் தயாரிக்கப்பட்ட தகுதியுள்ள விவசாயிகளின் விபரங்கள் ஏற்கனவே எரிசக்தி அமைச்சுக்கு வழங்கப்பட்டு, அங்கிருந்து அந்தந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் நிலையங்களில் தற்போது கடும் நெரிசல் காணப்படுவதால், விவசாய நடவடிக்கைகளுக்காக வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அனைத்து எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விவசாயத் திணைக்களத்தின் பரிந்துரைப்படி, அறுவடை நடவடிக்கைகளுக்கு ஒரு ஏக்கருக்கு 15 லீற்றர், நிலம் பண்படுத்தல் (உழுதல்) பணிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 30 லீற்றர் என்ற அளவில் எரிபொருள் வழங்கப்படவுள்ளது.விவசாயிகள் தமக்கு மிக அருகிலுள்ள அல்லது இலகுவான எரிபொருள் நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்தப் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

68 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

71 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

59 0 0