கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக வீசப்பட்டுள்ள குப்பைகள்.!
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக தனியார் நிறுவனம் ஒன்றின் பெயர் பொறிக்கப்பட்ட பொலித்தீன் பைகளில் குப்பைகளை நிரப்பி வைத்து விட்டு வெளியேறி உள்ளனர்.
இந்த கழிவுகளை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலை பகுதியில் போட்டது யார் என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
வைத்தியசாலையில் உள்ள அதிகாரிகள் இது குறித்து பாதுகாப்பு கெமாராக்களின் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.