உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான பிரேரணை நாளை சபாநாயகரிடம் கையளிப்பு!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
23 பார்வைகள்

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று நம்பிக்கையில்லா பிரேரணையை நாளை (வியாழக்கிழமை) சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்க திட்டமிட்டுள்ளனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக இந்தத் தகவலை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.


கருணாதிலக தெரிவித்ததாவது, “எரிசக்தி அமைச்சின் தற்போதைய செயற்பாடுகள், முறையற்ற நிர்வாகம் மற்றும் நிலவும் எரிசக்தி நெருக்கடிக்குத் தீர்வு காணாமை தொடர்பாக முன்வைக்கப்படும் அதிருப்தியின் வெளிப்பாடாகவே இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்படுகிறது. இதில் பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே கையொப்பமிட்டுள்ளனர்.

”நாளை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட பிறகு, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் இதன் விவாதம் நடைபெறும் போது சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, கியூ.ஆர். முறைமையில் உள்ள சிக்கல்கள் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வு முன்மொழிவு ஆகியவை அரசியல் பரபரப்பை அதிகரித்து, பிரேரணை சம்பவத்தை முக்கியமாக மாற்றியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

58 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

61 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

66 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

56 0 0