நாளை பல பகுதிகளில் கடும் வெப்பம் – மக்களுக்கு எச்சரிக்கை.!
நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் நாளை வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ, வடமத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மனித உடல் உணரும் வெப்பநிலை அவதானமிக்க அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, பொதுமக்கள் போதியளவு தண்ணீர் அருந்துவதுடன், தேவையற்ற வகையில் கடும் வெயிலில் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.