பள்ளிக்குடாவில் கடல் அட்டைகள் கைப்பற்றல்.!
கிளிநொச்சி – பள்ளிக்குடாவில் சுமார் 2000 கடல் அட்டைகளுடன் சட்டவிரோதமாக கொண்டு சென்ற மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்பள்ளிக்குடா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, குறித்த கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டன.குறித்த கடல் அட்டைகள் கடத்தப்பட்ட கெப் வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதானவர்கள் 23 முதல் 54 வயதுக்குட்பட்ட கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கடல் அட்டைகள் மற்றும் கெப் வண்டி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.