உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இந்தியப் பெருங்கடல் முக்கியத்துவம்: சமநிலையான வெளியுறவுக் கொள்கை அவசியம் – நாமல் ராஜபக்ஷ.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
25 பார்வைகள்

உலகளாவிய அதிகாரப் பகிர்வில் வேகமான மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை உணர்ந்து இலங்கை சமநிலையான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.


புதுடில்லியில் நடைபெற்ற ‘WION’ உலகளாவிய உச்சிமாநாட்டில் உரையாற்றிய அவர், உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக இந்தியப் பெருங்கடல் திகழ்வதை சுட்டிக்காட்டினார். உலகளாவிய எரிபொருள் போக்குவரத்தில் மூன்றில் இரண்டு பங்கும், கொள்கலன் போக்குவரத்தில் பாதியளவும் இப்பிராந்திய கடல் வழிகளின் மூலம் நடைபெறுகின்றன என்றும், டிஜிட்டல் தகவல் தொடர்புகளுக்கான கடலடி கேபிள்களும் இப்பகுதியை ஊடறுத்துச் செல்கின்றன என்றும் தெரிவித்தார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா இப்பிராந்தியத்தில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும், கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய இணைப்பு மற்றும் ‘நீலப் பொருளாதாரம்’ துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவது இலங்கைக்கு பலனளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.


எதிர்கால உலக அதிகாரத்தை செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் தீர்மானிக்கும் எனக் கூறிய அவர், இத்தொழில்நுட்பங்கள் நாடுகளுக்கிடையிலான பொருளாதார இடைவெளியை அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்றார்.

அத்துடன், பிராந்திய முதலீடுகளை மையமாகக் கொண்ட ‘தெற்காசிய ஹைட்ரஜன் பாதை’ ஒன்றை உருவாக்கும் யோசனையையும் முன்வைத்தார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் அமைதி மற்றும் ஒத்துழைப்பின் மையமாக நிலைத்திருக்க வேண்டியது அவசியம் என்றும், இப்பகுதியில் ஏற்படும் ஸ்திரமின்மை உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

58 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

62 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

66 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

56 0 0