உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ராகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு; பிரதான துப்பாக்கிதாரி கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான துப்பாக்கிதாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாதம்பே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2025.07.03 அன்று ராகம, படுவத்த பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர், நபர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அவரைக் கொலை செய்தனர்.

இது தொடர்பில் பேலியகொடை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வந்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி நேற்று (17) மாலை இங்கிரிய பொலிஸ் பிரிவில் வைத்து பேலியகொடை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ராகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

58 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

61 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

66 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

56 0 0