உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நாட்டை வந்தடைந்த எரிவாயு கப்பல்கள்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை உஸ்வெட்டகெய்யாவ, தல்தியவத்தையில் உள்ள எரிவாயு இறக்கும் மிதவையை வந்தடைந்துள்ளன.

அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று (17) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மார்ச் மாதத்தில் இதுவரையில் 38,000 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், அடுத்த இரண்டு நாட்களுக்குள் மேலும் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு கையிருப்பு நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எமக்கு மார்ச் மாதத்திற்கு 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவே தேவையாயிருந்தது. எனினும், ஒரு தனியார் நிறுவனம் எரிவாயு விநியோகத்தை முடக்கியுள்ளதால், மார்ச் மாதத்திற்காக நாம் 38,000 மெட்ரிக் தொன் ஓடர் செய்தோம். அதற்கான எரிவாயுவை எமது லிட்ரோ நிறுவனம் இறக்குமதி செய்கிறது. அந்த 38,000 மெட்ரிக் தொன்னும் தற்போது கிடைத்துள்ளது. அவற்றில் சில சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. சில உள்நாட்டு களஞ்சியசாலைகளில் உள்ளன. ஏனையவை மாலைதீவில் உள்ள மிதக்கும் களஞ்சியங்களில் சேமிக்கப்பட்டுள்ளன.

நாம் மேலும் ஒரு எரிவாயு கப்பலை ஓடர் செய்துள்ளோம். அதன்படி நாளை அல்லது மறுநாள் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு கப்பல் கிடைக்கவுள்ளது. எனவே, எரிவாயு சந்தையில் நெருக்கடி ஏற்படாது என அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

58 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

62 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

66 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

56 0 0