உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

நாட்டை வந்தடைந்த எரிபொருள் கப்பல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
24 பார்வைகள்

இன்று திங்கட்கிழமை (16) காலை மற்றுமொரு எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், அதிலுள்ள எரிபொருட்களை இன்றைய தினமே தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

இன்று வருகை தந்துள்ள கப்பலில் 17,000 மெட்ரிக் தொன் பெற்றோல், 18,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 3,000 மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் உள்ளடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து கப்பல்களும் நாட்டை நோக்கி வந்துகொண்டிருப்பதுடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் கோரிக்கைகளுக்கு அமைய விநியோக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, QR முறைமையினூடாக எரிபொருள் விநியோகிக்கப்படுவதை இலக்கு வைத்து சில தரப்பினர் போலி கணக்குகளைப் பயன்படுத்தி பொதுமக்களின் தகவல்களைத் திரட்டி வருவதாக நிர்வாக பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இணையத்தளத்தைத் தவிர வேறு எந்தவொரு தளத்திற்கும் தகவல்களை வழங்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மோசடி செய்பவர்கள் இவ்வாறு தகவல்களைத் திரட்டி போலி QR குறியீடுகளைத் தயாரிப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் காரணமாக உண்மையான உரிமையாளர்களுக்குத் தமது QR குறியீடுகளை மீண்டும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அற்றுப்போகும் அபாயம் உள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

43 0 0
இலங்கை செய்திகள்

யாழில் நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் செயற்படுகின்றன!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும்…

46 0 0
இலங்கை செய்திகள்

தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் இலங்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும்…

52 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

53 0 0