உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம திட்டம் அங்குரார்ப்பணம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

தேசத்தைக் கட்டியெழுப்புகின்ற வளமான கிராமத்தை உருவாக்கும் நிகழ்ச்சி திட்டம் clean srilanka நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வளமான நாடு வளமான கிராமம் என்ற தொனிப்பொருளில் கீழ் தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராமம் கல்முனை பிரதேச செயலகப் பிரிவுக்கு கீழ் உள்ள கல்முனைக்குடி -03 கிரீன் பீல்ட் பகுதியில் அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் விருந்தினர் வரவேற்கப்பட்டதுடன் மத அனுஷ்டானம் கிராஅத் ஓதலுடன் ஆரம்பமாகியது.

இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரி.எம்.எம். அன்சார் தலைமை தாங்கினார். அத்துடன் தேசிய உற்பத்தித்திறன் கீதம் அடங்கிய காணொளி இலத்திரனியல் திரையில் காண்பிக்கப்பட்டது.

மேலும் நிகழ்வின் ஆரம்பத்தில் வரவேற்பு உரையினை கிராம உத்தியோகத்தர் ஏ.எம். கியாஸ் மேற்கொண்டார். தொடர்ந்து clean srilanka நிறுவனத்தின் விளம்பர காணொளி சபையில் காண்பிக்கப்பட்டது.

அத்துடன் சமூக உற்பத்தித் திறன் தொடர்பாக தலைமையுரையினை பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரி.எம்.எம் அன்சார் உட்பட உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீட் சமூக உற்பத்தி தொடர்பிலான நோக்கம் பற்றிய தெளிவூட்டல் உரையினை மேற்கொண்டனர்.

இது தவிர உற்பத்தி திறன் காணொளி அவையோருக்கு காண்பிக்கப்பட்டது. நிகழ்வின் அடுத்ததாக கலாச்சார நிகழ்வு நடைபெற்றது. இதனை ஹஸீதாவினை அல் பஹ்ரியா பாடசாலை மாணவர்கள் மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை அரசியல் பேரவை உறுப்பினரும், கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்தி குழுவின் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எஸ்.இம்தியாஸ் உட்பட clean srilanka திட்ட கல்முனை பிரதேச செயலக ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.ஆர்.எம்.றினாஸ் உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எல்.பாஹிஸா எச்.எம் நிஸ்ரியா கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் இறுதியாக கல்முனை பிரதேச செயலகத்தின் கிரீன் பீல்ட் கிராமத்தில் அடையாளம் காணப்பட்டவை மற்றும் எதிர்கால சமூக உற்பத்தி திறன் அபிவிருத்தி திட்டத்தின் அறிக்கை அதிதிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டதுடன் திட்ட நிகழ்வின் மாதிரி பெயர் பலகையும் அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

43 0 0
இலங்கை செய்திகள்

யாழில் நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் செயற்படுகின்றன!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும்…

46 0 0
இலங்கை செய்திகள்

தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் இலங்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும்…

52 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

53 0 0