உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

பாடசாலை பேருந்து விபத்து; இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
31 பார்வைகள்

இன்று காலை தலவாக்கலை ஹட்டன் பிரதான வீதியில் பாடசாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை 7:45 மணியளவில், தலவாக்கலை புனித பெட்ரிக் கல்லூரி (St. Patrick’s College) மாணவர்களை ஏற்றிக்கொண்டு வழமை போல் பயணித்த பாடசாலை பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

தலவாக்கலை இருந்து ஹட்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அதே திசையில் முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு பேருந்துடன், மாணவர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக பேருந்து எதிர்பாராத விதமாக மிக பலமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

விபத்து நடந்தவுடன் அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சாரதியின் அதிவேகமே இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த தலவாக்கலை பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து, போக்குவரத்தைச் சீர்செய்ததுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

43 0 0
இலங்கை செய்திகள்

யாழில் நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் செயற்படுகின்றன!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும்…

46 0 0
இலங்கை செய்திகள்

தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் இலங்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும்…

52 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

53 0 0