உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை வெளிப்படுத்தவுள்ள உதய கம்மன்பில.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

அரசாங்கத்தினால் வெளியிடப்படாத ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பது குறித்த தகவல்களை எதிர்வரும் 31ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தவுள்ளதாக பிவிதுரு ஹெல உருமயவின் தலைவரும், சட்டத்தரணியுமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுமார் ஒன்றரை வருட காலமாக முன்னெடுக்கப்பட்ட நீண்ட ஆய்வின் அடிப்படையில், ‘ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடி’ (ஈஸ்டர் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரைக் கண்டறிதல்) எனும் ஆய்வு நூல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த நூல் மார்ச் 31ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு கொழும்பு ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி மாளிகையில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

கடந்த 07 வருடங்களாக ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் அரசியலுக்காக விற்கப்பட்டு வருகின்றது. இதனை வைத்து அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன, கலைக்கப்பட்டன. ஆனால், எந்தவித அடிப்படையும் இன்றி இராணுவத்தினரை துன்புறுத்துவதற்கு இந்தத் தாக்குதல் பயன்படுத்தப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதலை வைத்து முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலம் தற்போது வந்துள்ளது. உண்மையான சூத்திரதாரி யார் என்பதை ஆதாரங்களுடன் பகிரங்கப்படுத்துவோம்.” என உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

43 0 0
இலங்கை செய்திகள்

யாழில் நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் செயற்படுகின்றன!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும்…

46 0 0
இலங்கை செய்திகள்

தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் இலங்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும்…

52 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

53 0 0