உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

பெற்றோரிடம் பணம் வசூலிப்பதைத் தவிர்க்குமாறு அதிபர்களுக்கு பிரதமர் உத்தரவு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
39 பார்வைகள்

பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் பெற்றோர்களுக்கு எவ்வித பொருளாதாரச் சுமையையும் ஏற்படுத்தாத வகையில் அமைய வேண்டும் எனவும், இதற்காகப் பெற்றோரிடம் நிதி வசூலிப்பதைத் தவிர்க்குமாறும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அதிபர்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

தங்காலை மற்றும் வலஸ்முல்ல கல்வி வலயங்களைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான விழிப்புணர்வுச் சந்திப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் 2ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்காகப் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அத்துடன், வகுப்பறை மாணவர் எண்ணிக்கையை ஆரம்பப் பிரிவில் 25 – 30 வரையாகவும், இரண்டாம் நிலைப் பிரிவில் 35 வரையாகவும் மட்டுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் சுற்றறிக்கைகளுக்குப் புறம்பாக மாணவர்களை இணைத்துக்கொள்ளக் கூடாது.

2026ஆம் ஆண்டில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் ‘ஸ்மார்ட் போர்ட்’ மற்றும் இணைய வசதிகள் வழங்கப்படும். இதற்காகப் பெற்றோரிடம் பணம் கோரக் கூடாது. 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளுக்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பாடசாலை அபிவிருத்திப் பணிகளுக்காக முறையாகப் பயன்படுத்துவதை அதிபர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

கல்வித்துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப 23,000 ஆசிரியர்களைச் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான போட்டிப் பரீட்சைகள் ஏப்ரல் இறுதி அல்லது மே ஆரம்பத்தில் நடைபெறும்.

அதிபர் மற்றும் ஆசிரியர் நியமனங்கள் அல்லது இடமாற்றங்கள் வழங்கப்படும்போது, அரசியல் செல்வாக்குகளைப் பயன்படுத்தித் தமக்கு விருப்பமான இடங்களைப் பெற முற்படாமல், எவ்விதத் தயக்கமுமின்றி அவற்றை ஏற்றுப் பணிகளைப் பொறுப்பேற்க வேண்டும்.

அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து ஆராயச் சம்பளக் குழுவிற்குப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதிபர் சேவையின் கௌரவத்தை உறுதிப்படுத்துவதற்கான விசேட அறிக்கை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தகுதியுள்ளவர்கள் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்காமல் ஒரே பாடசாலையில் பிரதி அதிபர்களாகத் தொடர்வதை அனுமதிக்க முடியாது.

மாணவர்களின் பிரச்சினைகளுக்குத் தேசிய மட்டத்திலான தீர்மானங்கள் வரும் வரை காத்திருக்காது, கோட்ட மற்றும் மாகாண மட்டத்திலேயே துரித தீர்வுகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத், நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பத்தி, அதுல வெலந்தகொட மற்றும் மாகாண, வலயக் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

43 0 0
இலங்கை செய்திகள்

யாழில் நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் செயற்படுகின்றன!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும்…

46 0 0
இலங்கை செய்திகள்

தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் இலங்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும்…

52 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

53 0 0