உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

நெருக்கடிகளை எதிர்கொள்ளத் தயார்; அத்தியாவசிய சேவைகளை முடக்காது முன்னெடுங்கள்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், நாட்டின் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று (15) அமைச்சுகளின் செயலாளர்களுடன் விசேட கலந்துரையாடலை நடத்தினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், தற்போதைய உலகளாவிய நெருக்கடிகளால் எழக்கூடிய சவால்களை எதிர்கொள்வது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

சுகாதாரம், கல்வி, கைத்தொழில், விவசாயம் மற்றும் கடற்றொழில் போன்ற முக்கிய துறைகளின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அவற்றுக்கான எரிபொருள் தேவைகள் குறித்து அமைச்சுக்களின் செயலாளர்கள் இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

இக்கூட்டத்தில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட முக்கிய பரிந்துரைகள் வருமாறு,

எரிபொருள் கையிருப்பு
சுகாதாரத்துறை போன்ற அத்தியாவசிய சேவைகளுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்புகளைப் பிரதேச ரீதியாகப் பராமரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.

வீட்டிலிருந்து பணியாற்றும் முறை
தற்போதைய சூழலைக் கருத்திற்கொண்டு, வீட்டிலிருந்து பணியாற்றும் முறைமை குறித்து மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

கியூ.ஆர். குறியீட்டு முறைமை
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் குறியீட்டு முறையில் (கியூ.ஆர்.) காணப்படும் குறைபாடுகளை உடனடியாகச் சரிசெய்து, அதனை மேலும் முறைப்படுத்த வேண்டும்.

கூட்டுப் பொறுப்புடன் செயற்படல்
எதிர்கால நிலைமைகளை முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதால், அனைத்துத் துறைகளும் தனித்தனியாக முடிவெடுப்பதைத் தவிர்த்து, ஒட்டுமொத்த நாட்டு நலன் கருதி ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் நந்திக்க சனத் குமாநாயக்க உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

43 0 0
இலங்கை செய்திகள்

யாழில் நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் செயற்படுகின்றன!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும்…

46 0 0
இலங்கை செய்திகள்

தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் இலங்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும்…

52 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

53 0 0