உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மீன் விற்பனை எனும் போர்வையில் போதைப்பொருள் வியாபாரம்; இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
86 பார்வைகள்

மீன் விற்பனை எனும் போர்வையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை வீதியில் இன்று மாலை இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சிக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஊழல் ஒழிப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர்களான கே.எல்.எம் முஸ்தபா மற்றும் பி.குமாரசிங்க தலைமையிலான பொலிஸார் இக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது 49, 23 வயதுடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் வசம் இருந்து 40 மற்றும் 50 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கைதான சந்தேக நபர்களில் ஒருவர் ஏற்கனவே போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்ட போது மற்றுமொரு சந்தேக நபர் தொடர்பில் தகவல் வழங்கியுள்ளார். இதற்கமைய சமகாலத்தில் மற்றொரு சந்தேக நபரான மீன் வியாபாரியும் கைதானார். கைதானவர்கள் மீன் விற்பனையில் ஈடுபடும் வியாபாரி, உதவியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இச் சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் பணிப்புரைகமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி நெறிப்படுத்தலில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் வழிகாட்டுதலின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

84 0 0