உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஹெரோயினுடன் இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
86 பார்வைகள்

அம்பாறை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில்   சந்தேகத்திற்கிடமாக நடமாடியவரை   சோதனை செய்த போது அவரிடம் இருந்து 95 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

அம்பாறை நகரத்தின் திஸ்ஸபுரவில் இன்று நடமாடிய குறித்த சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் தங்கள் முகவரைப் பயன்படுத்தி 72 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை ரூபா 2000க்கு சந்தேக நபரிடம் இருந்து கொள்வனவு செய்துள்ளனர்.

இதன்போது ஹெரோயினை விற்பனை செய்து வந்த திஸ்ஸபுரத்தைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் அவரை சோதனை செய்த போது விற்பனைக்கு தயாரிக்கப்பட்ட 70 மில்லிகிராம், 80 மில்லிகிராம், 90 மில்லிகிராம் எடையுள்ள மூன்று சிறிய ஹெரோயின் பொதிகள் உட்பட ரூபா 6000 பணமும் அவரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.

அத்துடன் ஹெரோயின் வைத்திருந்ததற்காக ஒரு சந்தேக நபரும், ஹெரோயின் விற்பனை செய்ததற்காக மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சோதனையை அம்பாறை பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர்   பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் மேற்பார்வையில் அம்பாறை பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமாராச்சி மற்றும் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  உபுல் இந்திரஜித் குணவர்தன ஆகியோர் மேற்பார்வையில் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள்   மேற்கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

84 0 0