உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படப் படப்பிடிப்பு சென்னையில்.!

சினிமா 7 மாதங்கள் முன்
56 பார்வைகள்

நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை நகரில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, சந்தானம் நாயகனாக நடிக்கும் இந்த புதிய திரைப்படம் அவரது நடிப்பில் உருவாகும் 20-ஆவது படமாகும். இந்த திரைப்படத்தை வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் மற்றும் கே7 ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.


சுதாமன் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் மர்மம் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த காலப் பயணக் கதையை மையமாகக் கொண்டு உருவாகிறது. ஒரு குற்றத்தை விசாரிக்கத் தொடங்கும் துப்பறியும் நிபுணரை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அந்த விசாரணை அவரை எதிர்பாராத சாகசங்களும் பரபரப்பான நிகழ்வுகளும் நிறைந்த பயணத்துக்கு இட்டுச் செல்கிறது.

இத்திரைப்படத்தில் கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியன், பிரதீப் ஆண்டனி, ஜென்சன் திவாகர், டிஎஸ்ஆர் உள்ளிட்ட பலரும் சந்தானத்துடன் இணைந்து நடித்துவருகின்றனர்.


இதற்கான ஒளிப்பதிவை ரிச்சர்ட் எம். நாதன் மேற்கொண்டு வருவதுடன், இசையமைப்பை நிவாஸ் கே. பிரசன்னா வழங்குகிறார். கலை இயக்குநராக ஜாக்கி பணியாற்றி வருகிறார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

59 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

67 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

82 0 0
சினிமா

‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. ‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள…

73 0 0