உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ரவி மோகன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்.!

சினிமா 7 மாதங்கள் முன்
66 பார்வைகள்

ரவி மோகன் இயக்கத்தில் உருவாகும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
ரவி மோகன், ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதன் மூலம் ‘ப்ரோ கோட்’ மற்றும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ என இரண்டு திரைப்படங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தன.


இதில் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ திரைப்படத்தை ரவி மோகனே இயக்கியும் தயாரித்தும் வருகிறார். இதன் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகிறார்.நகைச்சுவையுடன் சமூகக் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னை நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக விவான் ஆம்பரோஸ், இசையமைப்பாளராக ஹைட்ரோ, கலை இயக்குநராக செளந்தர் மற்றும் ஆடை வடிவமைப்பாளராக பிரவீன் ராஜ் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.யோகி பாபுவுடன் இணைந்து நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்து படக்குழு இதுவரை அறிவிக்கவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

59 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

67 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

82 0 0
சினிமா

‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. ‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள…

73 0 0