உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஏஜிஎஸ் தயாரிப்பாளர் இல்ல திருமண நிகழ்வில் விஜய், த்ரிஷா பங்கேற்பு.!

சினிமா 7 மாதங்கள் முன்
63 பார்வைகள்

ஏ.ஜி.எஸ். நிறுவன தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யும் நடிகை த்ரிஷாவும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.சென்னையில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில், ஏ.ஜி.எஸ். நிறுவன தயாரிப்பாளர்களான கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ் மற்றும் கல்பாத்தி சுரேஷ் ஆகியோரின் குடும்பத்தினர் மற்றும் திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாக கலந்து கொண்டு மேடையில் அருகருகே நின்று மணமக்களை வாழ்த்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.இதற்கிடையில், விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் விஜய்யும் த்ரிஷாவும் ஒரே நிகழ்வில் கலந்து கொண்டது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
திருமண விழாவில் இருவரும் மணமக்களை வாழ்த்தும் காணொளி பதிவை பொதுத் தொடர்பு அதிகாரி நிகில் முருகன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளதையும் தொடர்ந்து இணையத்தில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

59 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

67 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

82 0 0
சினிமா

‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. ‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள…

73 0 0