உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

யாஷ் நடித்த ‘டாக்ஸிக்’ படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு.!

சினிமா 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்துள்ள ‘டாக்ஸிக் : பெரியவர்களுக்கான ஒரு பரிகதை’ திரைப்படத்தை நடிகை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இதில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.


இந்தப் படத்தை விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தைத் தயாரித்த கேவிஎன் புரொடக் ஷன்ஸ் நிறுவனம், யாஷின் மாஸ்டர்மைண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. முதலில் இந்தப் படம் மார்ச் 19ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விளம்பர நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.இந்நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக, படத்தின் வெளியீட்டு திகதி ஜூன் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பில், இந்தத் திரைப்படம் இந்தியாவிலும் உலகளாவிய பார்வையாளர்களுடனும் இணைவதற்கான நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகள் இந்தப் படத்தின் முக்கிய சந்தையாக இருப்பதால் அங்கு நிலவும் சூழ்நிலைகளை தயாரிப்பாளர்கள் கவனமாக கண்காணித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.


விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, விரிவான ஆலோசனைக்குப் பிறகு வெளியீட்டு திகதி மாற்றப்பட்டதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

65 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

69 0 0
சினிமா

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) காவ்யா மாறனுக்கும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்…

75 0 0
சினிமா

ரெயில்வே பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை கைது!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, பொலிஸார் கைது செய்தனர்.…

80 0 0