உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தனித்துவமான கதை அமைப்பில் உருவாகும் ‘ஓ பட்டர்பிளை’ திரைப்படம்.!

சினிமா 7 மாதங்கள் முன்
58 பார்வைகள்

விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஓ பட்டர்பிளை திரைப்படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி, அதுல், நாசர், லட்சுமி பிரியா, கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வைசாக் சோம்நாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேதராமன் சங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பலாம்பூர் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் மார்ச் 6ஆம் தேதி வெளியாகிறது.
படம் குறித்து இயக்குநர் விஜய் ரங்கநாதன் கூறியதாவது: “தனித்துவமான திரைப்படம் இயக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் சினிமாவுக்கு வந்தேன். ‘ஓ பட்டர்பிளை’ அப்படிப்பட்ட முயற்சியாக உருவாகியுள்ளது. ஏற்கெனவே வெளியான எந்தப் படத்துடனும் இதை ஒப்பிட முடியாது.

தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லும்போது, ‘இது எந்தப் படம் போல இருக்கும்’ என்று உதாரணம் கேட்கப்படுவது வழக்கம். ஆனால், இந்தப் படத்துக்கு அப்படி எந்தப் படத்தையும் சுட்டிக்காட்ட முடியவில்லை. அதனால் நாங்களே தயாரிக்க முடிவு செய்தோம்.
இது நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் உறவியல் திரில்லர். நிவேதிதா சதீஷ் சிறப்பாக நடித்துள்ளார். லட்சுமி பிரியா சன்னியாசி வேடத்தில் நடித்துள்ளார். படத்தில் பட்டாம்பூச்சி ஒன்று முக்கியக் கதாபாத்திரமாகவே இடம்பெறுகிறது. இந்தப் படம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும்,” என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

59 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

67 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

82 0 0
சினிமா

‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. ‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள…

73 0 0