தேவி பிரியா பயணித்த மகிழுந்து விபத்து – ஓட்டுநர் உயிரிழப்பு.!
பெரம்பலூர் அருகில் சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சராக நின்றிருந்த காரின் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் கடுமையான விபத்து ஏற்பட்டுள்ளது.தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துவரும் தேவி பிரியா, சென்னை நகரிலிருந்து பெரம்பலூர் நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் பாடலூர் ஆஞ்சநேயர் ஆலயப் பகுதியை அண்மித்தபோது கார் திடீரென பஞ்சராகியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ஓட்டுநரும் உதவியாளரும் இணைந்து சக்கரத்தை மாற்றிக் கொண்டிருந்த வேளையில், பின்னால் வந்த வாகனம் ஒன்று வேகமாக மோதியதாக கூறப்படுகிறது.இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நடிகை தேவி பிரியா லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். அவருடைய உதவியாளர் கடுமையானகாயங்களுடன் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவம் தொடர்பாக காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.