உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

உண்மைக் காதலை கற்றுத் தந்தவர்” – கணவர் குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி!

சினிமா 7 மாதங்கள் முன்
57 பார்வைகள்

திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் இன்று ராஜஸ்தான் மாநிலம் உதயபூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பல ஆண்டுகளாகக் காதலித்து வந்த இவர்கள், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமண பந்தத்தில் இணைந்தனர்.


திருமணத்துக்குப் பின்னர் ராஷ்மிகா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து உணர்ச்சிபூர்வமான பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், தமக்கு உண்மையான அன்பின் அர்த்தத்தை உணர்த்தியவர் விஜய் தேவரகொண்டா எனவும், தமது வாழ்க்கையின் எல்லா சாதனைகளும் அவரின் ஆதரவால் அர்த்தமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவரது துணைவியாக இருப்பது மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.விஜய் தேவரகொண்டாவும் தனது திருமண செய்தியை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இருவரும் இணைந்து வாழ்வது குறித்து திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இவர்கள் இணைந்து நடித்த திரைப்படங்களின்போது காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி எதிர்வரும் மார்ச் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டீஸர் வெளியீடு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அனிருத் இசையமைப்பில், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா…

63 0 0
சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

59 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

67 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

83 0 0