உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

போதைப்பொருள் வியாபாரி பம்போ கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
92 பார்வைகள்

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மிஹிதுபுர போதைப்பொருள் வியாபாரி பம்போ மீது மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர் குணவர்தனவிற்கு ( 73734 ) கிடைத்த ரகசிய தகவலின்படி கொழும்பிலிருந்து அம்பாறைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற பம்போ என்ற போதைப்பொருள் வியாபாரியை அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு தோட்டலக பகுதியில் இருந்து ஹெரோயின் ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்தில் அம்பாறைக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது பேருந்தை சோதனை செய்ததில் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பல சந்தர்ப்பங்களில் முயன்ற போதிலும் அவர் மிகவும் திறமையாக பொலிஸாரை ஏமாற்றி இந்தக் கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்டு வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 2677 மில்லிகிராம் ஹெரோயினை பொலிஸார் மீட்டனர்.

இச் சந்தேகநபர் அம்பாறை நகரின் மிஹிதுபுர நவகம்புர கல்மடுவ மற்றும் உதயபுர பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் அறிவுறுத்தலின் பேரில் அம்பாறை பிரிவுக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சியின் மேற்பார்வையில் அம்பாறை உதவி பொலிஸ் மா அதிபர் சம்பத் விக்ரமரத்ன மற்றும் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல் குணவர்தன ஆகியோரின் மேற்பார்வையில் அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உ.பி.பி.எம்.சாந்த குழுவினரால் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

84 0 0