உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பாரிய போராட்டம்; அனைவரும் அணிதிரள வேண்டும்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
52 பார்வைகள்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு மாற்றீடாகக் கொண்டு வருவதற்கு அரசாங்கத்தினால் முயற்சிக்கும் புதிய பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக எதிர்வரும் 28ம் திகதி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கோரத்தை உணர்ந்தவர்களாக இவ் எதிர்ப்புப் போராட்டத்திற்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும் என தாயக செயலணி அமைப்பின் இணைப்பாளர் இ.செல்வகுமார் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்பிலான ஊடக சந்திப்பு இன்று மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த செல்வகுமார்,
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கோர முகத்தை நன்கறிந்த இனமாக, அதன் பாதிப்புகளை முற்றுமுழுதாக அனுபவித்த இனமாக நாம் இருக்கின்றோம். தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் குறித்த சட்டத்தினால் பாதிப்புற்று, எதிர்க்கட்சியில் இருக்கும் போது இச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தது. ஆனால் ஆட்சி பீடமேறியதும் மாற்றம் என்று சொல்லி வந்தவர்கள் வழமையான சிங்கள பேரினவாத அரசுகள் போன்று தங்கள் ஆட்சியைத் தக்க வைக்கும் நோக்கோடு செயற்பட்டு வருகின்றமையை அனைவரும் நன்கு அவதானித்திருப்பீர்கள்.

அதே வகையிலேயே பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (Pவுயு) இல்லாமலாக்குவோம் என்று ஆட்சிப்பீடமேறியவர்கள் தற்போது அதனை விட பயங்கரமான சரத்துக்களை உள்ளடக்கியதாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் என்று முற்று முழுதாக மக்களை விடுத்து அரசாங்கத்தை காப்பாற்றும் முகமாக மனித உரிமைகளுக்கு எதிரான சட்டத்தினைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றது.

இதனைப் பாதிப்பின் உச்சத்தில் இருக்கும் தமிழ் மக்களாகிய நாம் பாரிய எதிர்ப்பின் மூலம் தடுத்து நிறுத்த வேண்டும். பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் அரசு எவ்வாறாயினும் இதனை நிறைவேற்றியே தீரும் என்ற அடிப்படை இருந்தாலும் இதற்கு தமிழ் மக்களின் முற்றுமுழுதான எதிர்ப்பு இருந்தது என்பதை உலகுக்கு நாம் பறைசாற்ற வேண்டும்.

இச்சட்டம் தமிழ் மக்களுக்கு எதிராகக் கொண்டு வந்தாலும் கடந்த காலங்களில் இதன் பாதிப்புகளை முஸ்லிம் மக்களும், அரகலயின் பின்னராக சிங்கள மக்களுக்கும் உணர்ந்திருப்பார்கள். எனவே இச்சட்டத்திற்கு முலாம் இடப்பட்டதாக வரும் புதிய பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தினையும் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.

அந்த அடிப்படையில் மக்களின் நலன் கருதி செயற்படும் கட்சிகள், அதன் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் என அனைத்து தரப்பினரையும் உள்ளீர்த்ததாக எதிர்வரும் 28.02.2026ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பாரிய எதிர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. குறித்த போராட்டத்திற்கு அனைவரின் ஆதரவையும், வருகையையும் எதிர்பார்த்து இவ் அழைப்பினை விடுக்கின்றோம்.

எனவே மனித உரிமைகளுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் சட்டத்திற்கு எதிரான குறித்த போராட்டத்திற்கு தங்கள் ஒவ்வொருவரினதும் ஆதரவும், பிரசன்னமும் தவறாது இருக்கும் என இன உணர்வுடன் நம்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

123 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0