உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை உண்மையை கண்டறிவதற்கான ஓர் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமையைக் கத்தோலிக்க திருச்சபை வரவேற்றுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஓர் அங்கமாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்றும் கத்தோலிக்க திருச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் குறித்து முன்னெடுக்கப்பட்டு வரும் விரிவான விசாரணைகளின் அடிப்படையில், சுரேஷ் சலே நேற்று பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். தற்போது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் கைது நடவடிக்கை குறித்து கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ சர்வதேச ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டார்,

“இந்தக் கைது நடவடிக்கையானது, விசாரணைகள் சரியான திசையில் தொடர்கின்றன என்பதற்கான ஒரு முக்கிய அறிகுறியாகும். எமக்குத் தேவையானது ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் மறைந்துள்ள உண்மைகளே தவிர வெறும் கைதுகள் மாத்திரமல்ல. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் முழுமையான நீதி கிடைக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடந்து பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை வெளிக்கொண்டு வர வேண்டும் எனக் கத்தோலிக்க திருச்சபை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

42 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

58 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

54 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0