உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

ராஜா சாப்’ படத்தின் தோல்வியால் தயாரிப்பாளருக்கு புதிய படம் நடிக்க சம்மதித்த பிரபாஸ்.!

சினிமா 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

மாருதி இயக்கத்தில் பிரபாஸ், சஞ்சய் தத், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்த ‘தி ராஜா சாப்’ திரைப்படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது. எனினும், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


பட வெளியீட்டுக்குப் பிறகு, கடந்த வாரம் பிரபாஸ் தயாரிப்பாளர் விஷ்வ பிரசாத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அப்போது ‘ராஜா சாப்’ தோல்விக்குப் பொறுப்பேற்று, அவரது தயாரிப்பு நிறுவனத்துக்காக மேலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு தயாரிப்பாளர் தரப்பில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாம் நடித்து வரும் படங்களை முடித்த பின்னர், பிரபாஸ் புதிய படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் படத்தின் இயக்குநர் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.பிரபாஸின் இந்த முடிவை தெலுங்கு திரையுலகினர் பலரும் வரவேற்றுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

65 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

69 0 0
சினிமா

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) காவ்யா மாறனுக்கும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்…

75 0 0
சினிமா

ரெயில்வே பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை கைது!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, பொலிஸார் கைது செய்தனர்.…

80 0 0