உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

புலிகளை அழித்தவரை அரசு வேட்டையாடுவதா? – சுரேஷ் சலே கைதுக்கு உதய கம்மன்பில கடும் எதிர்ப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமையானது அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குற்றம் சாட்டினார்.

இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,
“விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது சுரேஷ் சலே நாட்டுக்காகப் பாரிய பங்களிப்பை வழங்கிய ஓர் அதிகாரி ஆவார். அத்தகைய ஒருவரைப் பழிவாங்கும் நோக்கம் பிரிவினைவாத சக்திகளுக்கு நீண்டகாலமாகவே இருந்து வருகின்றது. தற்போது நடைபெற்றுள்ள இந்தக் கைது நடவடிக்கையின் பின்னணியில் அத்தகைய சக்திகளின் தூண்டுதல் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் உண்மையான சூத்திரதாரி யார் என்பது கண்டறியப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்தத் தாக்குதலுடன் தொடர்பில்லாத அப்பாவிகளைத் திட்டமிட்ட அடிப்படையில் இலக்கு வைத்துத் தண்டிப்பதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இத்தகைய அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராக நாம் முன்னின்று குரல் கொடுப்போம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

42 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

58 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

54 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0