உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக யாழில் மாபெரும் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

“பழசும் வேண்டாம், புதுசும் வேண்டாம்” எனும் தொனிப்பொருளில், பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரி நாளைமறுதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இப்போராட்டம், அன்றைய தினம் காலை யாழ். பொது நூலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகவுள்ளது. அங்கிருந்து பேரணியாகச் செல்லும் போராட்டக்காரர்கள், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தை சென்றடைந்து தமது கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தாயகச் செயலணியின் பிரதிநிதிகள் இப்போராட்டம் குறித்த விவரங்களை வெளியிட்டனர். இதன்போது, கட்சி பேதங்களைக் கடந்து அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் இப்போராட்டத்தில் கைகோர்க்குமாறு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

ஊடகச் சந்திப்பில் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்ததாவது,
“தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழ் மக்கள் நீண்டகாலமாகப் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இச்சட்டத்தை நீக்குவதாக வாக்குறுதியளித்தே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால், பழைய சட்டத்தை நீக்குவதற்குப் பதிலாக, அதற்கு மாற்றாகப் புதியதொரு சட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கிறது.

எம்மைப் பொறுத்தவரை இச்சட்டம் பழையதோ அல்லது புதியதோ, அதன் வடிவம் எதுவாக இருந்தாலும் அது தேவையற்றது. மக்களைப் பாதிக்கும் இத்தகைய கொடிய சட்டங்கள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அரசின் புதிய சட்ட முயற்சியைக் கண்டித்தும், நீதியை வலியுறுத்தியுமே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” – என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

42 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

58 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

54 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0