உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கிவுல் ஓயா திட்டத்தின் பின்னணி சிங்களக் குடியேற்றமல்ல.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
24 பார்வைகள்

“கிவுல் ஓயா திட்டத்தின் பின்னணி சிங்களக் குடியேற்றமல்ல. மாறாக, விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரை சேமிப்பதே நோக்கமாகும்” – என்று அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற பிரஜாசக்தி உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் சந்திரசேகர் மேலும் தெரிவித்ததாவது:-

“கிவுல் ஓயா திட்டத்தை வைத்து பல்வேறு விதமான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. சிங்களக் குடியேற்றத்தை நோக்கமாகக் கொண்டு கிவுல் ஓயா திட்டம் அமைக்கப்படவில்லை. மாறாக, விவசாயத்தை மேம்படுத்துவதற்காகவே அந்தத் திட்டம் கொண்டுவரப்படுகின்றது. அங்கு குடியேற்றங்களை மேற்கொண்டால் தமிழ்க் குடியேற்றங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

கடந்த அரசுகளில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பில் நாங்கள் தீர்க்கமாக விசாரித்து வருகின்றோம்.

ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசு கடந்த அரசுகளைப் போன்றதல்ல. இந்த அரசாங்கத்தில் வெளிப்படைத்தன்மை உள்ளது.

மக்களின் நலனுக்கு முன்னுரிமை வழங்கியே அனைத்துத் திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

42 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

58 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

54 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0