உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கடந்த நான்கு மாதங்களில் ஒரு இலட்சம் பேர் கைது; பெருமளவான போதைப்பொருட்களும் மீட்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்புக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ், கடந்த நான்கு மாதங்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வூட்லர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த நான்கு மாதங்களாக போதைப்பொருள் ஒழிப்புச் செயற்றிட்டம் மிகவும் ஆக்கபூர்வமான முறையில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

இக்காலப்பகுதியில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 900 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்புகளின் போது மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் விவரங்கள் பின்வருமாறு:-

ஹெரோயின் 526 கிலோ கிராம், ஐஸ் 1,419 கிலோ கிராம், கஞ்சா 3,548 கிலோ கிராம்

கைது செய்யப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 400 பேருக்கு எதிராக நீதிமன்றங்கள் ஊடாகத் தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய சட்டவிரோத சொத்துக் குவிப்புத் தொடர்பில் 146 விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

42 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

58 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

54 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0