உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தையிட்டி விகாரை நில ஆக்கிரமிப்பு: யாழ். பல்கலைக்கழகத்தில் முக்கிய கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

தனியார் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தையிட்டி விகாரையை முன்னிறுத்தி “அரச மதமும் தனியார் காணியும்” எனும் பொருளில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளது.இந்த நிகழ்வை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆசிரியர் சங்கம் ஒழுங்கமைத்துள்ளது.


எதிர்வரும் 27.02.2026 (வெள்ளிக்கிழமை) அன்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் மாலை 02.00 மணி முதல் 04.00 மணி வரை இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.வடக்கு – கிழக்குப் பகுதிகளில் சிங்கள பௌத்த மதச் சின்னங்களை முன்னிறுத்தி இடம்பெற்றதாகக் கூறப்படும் நில ஆக்கிரமிப்புகளில் முக்கியமாகக் கருதப்படும் தையிட்டி விவகாரத்தை மையமாகக் கொண்டு, அரச மதம் மற்றும் தனியார் காணி உரிமைகள் தொடர்பில் எழுந்துள்ள சமூக, சட்ட, அரசியல் மற்றும் மனித உரிமை பரிமாணங்களை ஆராய்வதேஇக்கலந்துரையாடலின் நோக்கமாகும்.


இதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ம. திருவரங்கன், சட்டத்தரணி கலாநிதி கு. குருபரன், வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ. சுகிர்தன் மற்றும் தையிட்டி விகாரையினால் நிலத்தை இழந்த சா. சுகுமாரி ஆகியோர் கருத்துரைக்க உள்ளனர்.
மாணவர்கள், கல்வியாளர்கள், பணியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்று தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

42 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

58 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

54 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0