உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

விசுவமடு – சாலை விபத்தில் குடும்பப் பெண் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

முல்லைத்தீவு மாவட்டம், விசுவமடு புளியடி பகுதியில் சாலையை கடந்துச் செல்ல முயன்ற குடும்பப் பெண் ஒருவரை இருசக்கர வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தார்.அதிக வேகத்தில் வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை கடந்துச் சென்ற பெண்ணை மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திலேயே அந்தப் பெண் உயிரிழந்தார்.


இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் கடுமையாகக் காயமடைந்து தர்மபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் விசுவமடு புளியடி பகுதியைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தாயாரான 53 வயதுடைய என். சுகந்தினி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

57 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

53 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0