உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சிறுவர் நன்னடத்தை நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற ஆறு சிறுவர்கள் .!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

பாணந்துறை – நல்லூருவ, காலி வீதியில் அமைந்துள்ள சிறுவர் நன்னடத்தை மேம்பாட்டு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தப்பிச் சென்றவர்களில் 12 வயதுடைய ஐந்து சிறுவர்களும், 16 வயதுடைய ஒரு சிறுவனும் அடங்குகின்றனர்.

இவர்கள் கொழும்பு 02, புவக்பிட்டிய, பொல்கஸ்ஓவிட்ட, நுகேகொடை, கொட்டாவ மற்றும் பாணந்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.நேற்று மாலை 3.50 மணிக்கும் இன்று நள்ளிரவு 12.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் குறித்த நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுவர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.இது தொடர்பில் சிறுவர் இல்லத்தின்காப்பாளர் வழங்கிய முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இன்று (25) மதியம் வரையிலும் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பாணந்துறை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் உபுல் பிரியங்கரின் அறிவுறுத்தலின் கீழ், பாணந்துறை தெற்கு பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் தப்பிச் சென்ற சிறுவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

57 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

53 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0