உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வாகன இலக்கத் தகடுகள் குவிந்துள்ளதால் களஞ்சிய சாலைகளில் நெருக்கடி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாகன இலக்கத் தகடுகளை அவற்றின் உரிமையாளர்கள் இதுவரை பெற்றுக்கொள்ளாததால், திணைக்களத்தின் களஞ்சியசாலைகள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.


கடந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட இலக்கத் தகடுகள் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேங்கிக் கிடக்கின்றன. இவை பெருமளவில் குவிந்திருப்பதால், பணியாளர்கள் தமது அன்றாட நிர்வாகப் பணிகளை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.


அதேவேளை, ஏனைய மாகாணங்களுக்கு மொத்தம் 1,46,712 இலக்கத் தகடுகள் அச்சிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.இதன் பின்னணியில், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் விரைவாகத் தங்களுக்குரிய இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

57 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

53 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0