உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பதுக்கி வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு கொள்கலன்கள் மீட்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

நோர்வூட்டில் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை அதிக விலைக்கு விற்ற எரிவாயு விற்பனை முகவருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுவரெலியா மாவட்ட நுகர்வோர் சேவைகள் அதிகாரசபையின் தலைமை விசாரணை அதிகாரி ரவீந்திர ஹதுஹின்ன தெரிவித்தார்.

நோர்வூட்டில் சமையல் எரிவாயு இருப்புக்கள் பதுக்கி வைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் சேவைகள் அதிகாரசபைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இன்று (25) குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.இதன்போது 12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றினை 4,000 ரூபாய்க்கு விற்றதாகவும் ரவீந்திர ஹதுஹின்ன கூறினார்.

நுவரெலியா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்டோர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில், கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இது தொடர்பாக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நுவரெலியா மாவட்ட நுகர்வோர் சேவைகள் அதிகார சபையின் தலைமை விசாரணை அதிகாரி ரவீந்திர ஹதுஹின்ன, எரிவாயு இருப்புக்கள் கடையில் காட்சிப்படுத்தப்படாமல் வேறோர் இடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், எரிவாயு இருப்புக்களை காட்சிப்படுத்தி விற்குமாறு விற்பனை பிரதிநிதிக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் அவர், நுவரெலியா மாவட்டத்தில் எரிவாயுவை பதுக்கும் வர்த்தகர்களைக் கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் ஆகிய இரண்டு வகையான சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கும் நாடு முழுவதும் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் சில வர்த்தகர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் சமையல் எரிவாயு கொள்கலன்களைப் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்துள்ள முறைப்பாடுகளையடுத்து இந்த சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

57 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

53 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0